மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மதுரையை குறிவைக்கும் பிரபல நடிகர். பிரமாண்ட விழா ஏற்பாடு.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திக்கேயன் மற்றும் இயக்குனர் பொன்ராம் மூன்றாவது முறையாக இணையும் திரைப்படம் சீமராஜா.
இப்படத்தில் சமந்தா கதாநாயகியாக நடிக்கின்றார். சூரி, நெப்போலியன், சிம்ரன், லால், ராஜேந்திரன், மனோபாலா மற்றும் யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் நடிகை கீர்த்தி சுரேஷ் கௌரவ வேடத்தில் நடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பிரபல இசையமைப்பாளர் டி.இமான் இசையமைதுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, மதுரையில் வருகிற ஆகஸ்ட் மாதம் 3-ஆம் தேதி பிரம்மாண்டமாக நடக்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
இதையடுத்து, இந்தப் படத்தின், தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா அளித்த பேட்டியில், தமிழகத்தின் மையமாக விளங்கும் நகரம் மதுரை . படத்தை ஆரம்பிப்பதற்கு முன்பே படத்தின் இசை வெளியீட்டு விழாவை மதுரையில் தான் நடத்த வேண்டும் என்று முடிவு செய்தோம்.
அது மட்டுமில்லாமல், மதுரையில் உள்ள ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் எண்ணிக்கையில் இந்த விழாவில் கலந்து கொண்டு, இந்த நிகழ்ச்சியை ஒரு பெரிய வெற்றியாக மாற்றுவார்கள் என்று நம்புகிறேன் என்றும் அவர் கூறினார்.