சீமராஜா திரை விமர்சனம்! படம் சூப்பரா? சுமாரா?
அஜித், விஜய்க்கு அடுத்த இடத்தை பிடித்துவிட்டதாகவும், மாஸ் ஓப்பனிங் வசூல் பெரும் நடிகர் என்ற பெயரை எடுத்துவிட்ட சிவகார்த்திகேயன் ஹாட்ரிக் கூட்டணியாக பொன்ராமுடன் சீமராஜாவை களத்தில் இறக்கியுள்ளார், இந்த படமும் சிவகார்த்திகேயனின் வெற்றி மகுடத்தில் இணைந்ததா? வாங்க பார்ப்போம்.
கதைக்களம்
வழக்கம்போல வேலை வெட்டி இல்லாமல் ஊரை சுற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் ராஜ வம்சத்தை சேர்ந்தவர். இதனால் இவரை ஊரே மதிக்கிறது. இதனால் பலநிகழ்ச்சிகளுக்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளும் சிவகார்த்திகேயன் ஒரு விழாவில் நடிகை சமந்தாவை பார்த்து காதல் கொள்கிறார்.
அதை தொடர்ந்து சமந்தா புலியம்பட்டியை சார்ந்தவர், சிவகார்த்திகேயன் சிங்கம்பட்டியை சார்ந்தவர் இந்த இரண்டு ஊருக்கும் ஒரு மார்க்கெட் தான் பஞ்சாயத்து. அது மட்டுமின்றி சில விவசாய நிலங்களை வில்லன் லால் மிரட்டி பறித்துள்ளார்.
இந்நிலையில் ரோடோறோம் இரண்டு ஊரு மக்களும் கடைபோட்டு வியாபாரம் பார்க்க, போலீசார் அதை இடித்து தள்ளுகின்றனர். இதில் சமந்தாவின் கடையும் ஓன்று. இதன் மூலம் சமந்தாவின் மனதில் இடம்பிடிக்க முயற்சி செய்யும் சிவா பூட்ட பட்ட மார்க்கெட்டை திறக்கும் முயற்சியில் ஈட்படுகிறார். இதனால் இரண்டு ஊருக்கும் ஒரு மல்யுத்த போட்டி நடைபெறுகிறது. இதில் வெற்றிபெறுபவருக்கே மார்க்கெட் என முடிவு செய்கின்றனர்.
அதில் சிவகார்த்திகேயன் வெற்றிபெற பிறகு தான் தெரிய வருகின்றது சமந்தா லாலின் முதல் மனைவி மகள் என்பது. பிறகு என்ன இவர்கள் காதல் இணைந்ததா? சீமராஜா, லாலின் அதிகாரத்தை அடக்கினாரா? மக்களின் நிலத்தை மீட்டாரா? என்பதே மீதிக்கதை.
இதற்கு இடையில் சிவகார்த்திகேயனின் தந்தை நெப்போலியன் இறந்துவிட அடுத்த ராஜாவாக பொறுப்பேற்கிறார் நம்ம சீமராஜா. தனது தாத்தாவுடன் ஆசீர்வாதம் வாங்க செல்லும் சிவர்த்திகேயனுக்கு அவரது தாத்தா அவர்களது ராஜ வம்சத்தின் கதை ஒன்றை சொல்கிறார். இதுவே இரண்டாம் பாகம் முழுக்க செல்கிறது. அதில் ராஜாவாக நடித்துள்ள சிவகார்த்திகேயன் பாகுபலியில் போரில் சண்டை நடப்பது போல இதிலும் ஒரு சண்டை காட்சி இடம்பெற்றுள்ளது.
படத்தை பற்றிய அலசல்
சிவகார்த்திகேயன் சூரி கூட்டணி மீண்டும் அசதியுள்ளது. டான்ஸ், வசனம், நடிப்பு என அனைத்திலும் அசத்தியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். படத்தில் ஊருக்குள் சிறுத்தை வருவது போன்று ஒரு காட்சி அமைந்திருக்கும் அதில் வரும் நகைசுவை ரசிக்கும்படி இருக்கும்.
போர் நடப்பதுபோன்று அமைக்கப்பட்ட கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மிகவும் அருமை. மேலும் நடிகர்கள் நெப்போலியன், சமந்தா, சூரி என அனைவரும் தங்களது கதாபாத்திரத்தில் குறைவின்றி நடித்துள்ளனர்.
டி.இமானின் இசையில் பாடல்கள் ஓகே, ஆனால் பின்னணி ஏன் சார் இவ்வளவு ரிப்பீட் டியூன்ஸ், ஒளிப்பதிவு கலக்கல், அதிலும் ராஜா போஷன் சூப்பர்.
க்ளாப்ஸ்
படத்தின் முதல் பாதி மிகவும் அருமை. சிவா மற்றும் சூரியன் காமெடி சூப்பர்.
பல்ப்ஸ்
படத்தின் இரண்டாம் பாதி மிகவும் சொதப்பல் முதல் பாதிக்கும் இரண்டாம் பாதிக்கும் சற்றும் ஒற்றுமை இல்லாததுபோல் படம் நகரும். இரண்டாம் பகுதியை பார்க்கும் ரசிகர்களுக்கு ஸ்க்ரீன் மாறி வேறு படத்திற்கு வந்துவிட்டோமா என்பது போல படம் அமைந்த்துள்ளது.
வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் லால் மற்றும் சிம்ரன் இவர்களது கதைக்கு அவ்வளவு குக்கியத்துவம் தரப்படவில்லை. காமெடி வில்லனாகவும் இல்லாமல், சீரியஸ் வில்லனாகவும் இல்லாமல் செல்கிறது இவர்களது கதாபாத்திரம்.
சிவா மற்றும் சமந்தா இருவரும் வரும் சீன்கள் மிகவும் குறைவு. இருவருக்குள்ளும் அந்த அளவிற்கு கெமிஸ்ட்ரி ஒத்துப்போகவில்லை என்பதுபோல் தோன்றும்.
ஒட்டு மொத்தத்தில் முதல் பாகம் சூப்பரோ சூப்பர். இரண்டாம் பாகம் சுமார்தான்.