மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
'சீமராஜா மட்டும் இல்ல, ராஜாதிராஜாவும் நான் தான்' - மாஸ் காட்டும் சிவகார்த்திகேயன்
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் - பொன்ராம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் சீமராஜா. இந்தப் படத்தின் டீசர் ஆகஸ்ட் 3-ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையை பெரும் வரவேற்பைப் பெற்றது.
இப்படத்தை தயாரித்து வரும் 24AM ஸ்டூடியோ படத்தை விநாயகர் சதூர்த்திக்கு வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.
படத்தில் பாடல்களும் வெளியாகி ரசிகர்களிடையை பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வாரேன்.. வாரேன் சீமராஜா பாட்டின் லிரிக்கல் வீடியோ பாடலை 50 லட்சம் பார்வையாளர்களை நெருங்கியுள்ளது. மற்ற பாடல்களும் யூடியூப்பில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நிலையில், படத்தின் டிரெய்லர் இன்று வெளியானது.
இப்படத்தில் சமந்தா, சிம்ரன், சூரி, யோகி பாபு, நெப்போலியன், மனோபாலா ஆகியோர முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் டிரெய்லர் இன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ சீமராஜா படத்தின் டிரெய்லர்