மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
செம்பருத்தி சீரியலில் இவரை மாற்றி விட்டார்களா! இனி எப்படி இருக்குமோ? அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
பொதுவாக முன்பெல்லாம் இல்லத்தரசிகள் சீரியல் பார்த்துவந்தனர் ஆனால் தற்பொழுது இளைஞர்கள், இளம்பெண்கள் என அனைவரும் டிவி சீரியல் பார்க்க தொடங்கிவிட்டனர்.
இந்நிலையில் அனைத்து தொலைக்காட்சி சேனல்களும் மக்களை கவர்வதற்காகவும், தங்களது டிஆர்பியை அதிகரிப்பதற்காகவும் வித்தியாசமான பல சீரியல்களை வெளியிட்டு வருகின்றனர் அதுமட்டுமின்றி பலவிதமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி வருகின்றனர்.
இந்நிலையில் உலக அளவில் பிரபலமான தொலைக்காட்சியான சன் டிவி டிஆர்பி சாதனையை பின்னுக்குத் தள்ளி மாபெரும் சாதனை படைத்த தொலைக்காட்சி ஜீ தமிழ்.
அதாவது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்று டிஆர்பியில் முந்தி சாதனை படைத்துள்ளது. மேலும் காதல் மற்றும் குடும்பத்தை அடிப்படையாகக் கொண்டு விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருந்த இந்த சீரியலில் அமைதியாக ஒரு பெரிய மாற்றம் ஒன்று நடைபெற்றுள்ளது.
அதாவது செம்பருத்தி சீரியலை இதற்கு முன்பு சுலைமான் என்ற இயக்குனர் இயக்கி வந்தார். ஆனால் ஒருசில காரணங்களால் அவர் மாற்றப்பட்டு தற்பொழுது நீராவி பாண்டியன் என்பவர் செம்பருத்தி தொடரை இயக்க உள்ளார். இந்நிலையில் இதன் பிறகு செம்பருத்தி தொடர் முன்பைப் போல் விறுவிறுப்பாகவும், ஆர்வத்துடனும் இருக்குமா? என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.