மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சொல்வது மட்டுமல்லாமல் அதிரடியாக செய்து காட்டிய சென்ட்ராயன், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சென்றாயனின் செயலால் ஷாக் ஆன ரசிகர்கள் .!
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரபரப்படும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 2 .இதில் 16 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் தற்போது 10 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு தற்போது 6 பேர் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் தற்போது உள்ளனர் .
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் தனது வெளிப்படையான பேச்சாலும் , கிராமத்து வாசத்தாலும் அனைவரையும் கவரும் போட்டியாளராக இருந்தவர் சென்ராயன்.
மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் எந்த ஏற்ற தாழ்வும் இல்லாமல் அனைவரிடமும் சகஜமாகப் பழகி வந்த சென்ராயன் நாளையில் ஒவ்வொருவரின் சுயரூபத்தையும் தெரிந்துகொண்டு அதற்கேற்றாற்போல் உஷாராக நடந்து வந்தார்.
இவர் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றபட்டார்.
சென்ராயன் பிக் பாஸ் வீட்டில் இருந்தவரை தாடி பாலாஜியிடம் தான் மிகவும் நெருக்கமாக இருந்து வந்தார்.
அதே போல பாலாஜியின் மனைவி நித்யா இருந்தவரை சென்ராயன் எப்போதும் நித்யாவிற்கு ஆதரவாகவே இருந்தார் .மேலும் பாலாஜி நித்யாவிடம் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்று சென்ராயன் எப்போதும் கூறிவந்தார்.
அதே போல பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போதும் தான் வெளியே சென்றதும் கண்டிப்பாக நித்யாவை சந்திக்கிறேன் என்று பாலாஜியிடம் கூறிவிட்டு வெளிய வந்தார் .
இந்நிலையில் வெளியே சென்ற சென்ட்ராயன் சமீபத்தில் நித்யாவையும் அவரது மகள் போசிகாவையும் நேரில் சென்று சந்தித்து புகைப்படமும் எடுத்துக்கொண்டுள்ளார்.
மேலும் இந்த புகைப்படங்களை பாலாஜியின் மனைவி நித்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.