அடஅட.. ராஜாராணி 2 வில்லி அர்ச்சனாவா இது! செம ஹாட்டாக ஹாலிவுட் ஹீரோயின்களையே மிஞ்சிட்டாரே!



Serial actress archana photoshoot viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் பலவற்றிற்கும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு உள்ளது. அவ்வாறு மக்கள் மனதை பெருமளவில் கவர்ந்த தொடர்களில் ஒன்றுதான் ராஜா ராணி 2. இந்த தொடரில் ஹீரோவாக, சரவணன் கதாபாத்திரத்தில் சித்து மற்றும் ஹீரோயின் சந்தியா கதாபாத்திரத்தில் ஆலியா மானசா ஆகியோர் நடித்து வந்தனர்.

ஆனால் கர்ப்பமாக இருந்த நிலையில் பிரசவத்திற்காக ஆலியா தொடரை விட்டு அண்மையில் விலகினார். அதனைத் தொடர்ந்து தற்போது புதிய சந்தியாவாக ரியா என்பவர் நடித்து வருகிறார். மேலும் ராஜாராணி 2 தொடரில் காமெடியான வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தவர் அர்ச்சனா. இத்தொடரில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. 

சீரியல்களில் குடும்ப பாங்காக இருக்கக்கூடிய அர்ச்சனா, கிளாமர் உடையில் அசத்தலான போட்டோ ஷூட் நடத்தி அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கங்களில்  புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் அவர் தற்போது ஹாலிவுட் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் கருப்பு நிற மாடர்ன் உடையில் ஹாட்டாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.