மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தொடர்ச்சியாக வரும் கொலைமிரட்டல் அழைப்புகள்: நடிகர் ஷாருக் கானுக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு..!
பதான், ஜவான் என தொடர்ந்து இரண்டு வெற்றி படங்களை கொடுத்து, சர்வதேச அளவிலும்-இந்திய அளவிலும் மீண்டும் தன்னை கிங் கானாக உயர்த்தி காண்பித்து இருக்கும் நடிகர் ஷாருக்கான், ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.
அவரின் ஜவான் திரைப்படம் ஆயிரம் கோடிகளை கடந்து வசூலை வாரிக்குவித்து வருகிறது. இந்நிலையில், அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்து கொலை மிரட்டல் வருவதாக தெரிய வருகிறது.
இது தொடர்பாக மகாராஷ்டிரா மாநில அரசிடம் ஷாருக்கான் தரப்பு புகார் அளிக்கவே, இதனையடுத்து அவருக்கு ஒய் பிளஸ் செக்யூரிட்டி (Y+ Security) பாதுகாப்பானது வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஆறு கமாண்டோஸ், 4 காவலர்கள், இரண்டு போக்குவரத்து சீர் செய்யும் வாகனங்கள் ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளன. மொத்தமாக 11 காவலர்கள் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.