7ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகம்; இயக்குனர் செல்வராகவன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
நான் ஏமாந்தது போல் யாரும் ஏமாந்துடாதீங்க..! ஓப்பனாக பேசிய நடிகை ஷகிலா.!
மலையாளத்தில் நடிகையாக அறிமுகமான ஷகிலா தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி பல படங்களில் நடித்துள்ளார். 1990 களில் வயது வந்தோருக்கான படங்களில் நடித்து, தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே பெற்றிருந்தார். இந்நிலையில், ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் ஒன்று உருவாகி உள்ளது.
இப்படத்தை இந்திரஜித் லங்கேஷ் இயக்கி இருக்கிறார். நேரிடையாக இந்தி மொழியில் எடுக்கப்பட்ட இப்படம், ஒரே நேரத்தில் தமிழ், கன்னடம், தெலுங்கு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வரும் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று வெளியாகவுள்ளது.
நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் வரும் கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் டிரைலர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் நேற்று சென்னையில் ஷகிலா படத்தின் பிரஸ்மீட் நடந்தது. இதில் நடிகை ஷகிலா கலந்து கொண்டு பேசினார்.
அப்போது சகிலா பேசுகையில், என்னைப் பற்றி யாராவது தவறாக கூறினால் நான் அதனை பெரிதாக நினைத்து கவலைப்படுவதில்லை. ஏனென்றால் என் முன்னாடி பேசுவதற்கு யாருக்கும் தைரியம் இருந்தது இல்லை. அதனால் தான் நான் அதை பற்றி கவலைப்படவில்லை
நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான். நான் என்னுடைய வாழ்க்கையில் செய்த தவறுகளை இனி வரும் நடிகைகளும், படித்துவிட்டு வேலைக்கு செல்லும் பெண்களும் செய்யக்கூடாது என்ற ஒரு மெசேஜை இந்த படத்தின் மூலம் சொல்ல வேண்டும் என்று நான் நினைத்தேன். நான் என்னுடைய வாழ்க்கை வரலாறு புத்தகத்திலும் அதைத்தான் கூறியுள்ளேன். இந்த மெசேஜ் பெண்களுக்கு போய் சேர்ந்தாலே எனக்கு திருப்திதான் என ஷகிலா கூறியுள்ளார்.