மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகைகளை அசிங்கப்படுத்தி வரும் பயல்வான் ரங்கநாதனை கலாய்த்த சாந்தனு.!
தமிழ் திரை உலகில் முன்னணி நடிகரான பாக்யராஜின் மகன் சாந்தனு முதன்முதலில் 'சக்கரகட்டி' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். முதல் படத்திலேயே இவரின் நடிப்பு திறமை மக்கள் கவனத்தை ஈர்த்தது.
இதன்பிறகு சித்து +2, ஆயிரம் விலக்கு, கண்டேன், அம்மாவின் கைபேசி, வானம் கொட்டட்டும், வாய்மை, பாவ கதைகள், கசடதபறுங்கைக்காய் சிப்ஸ் என பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கிறார். இவர் நடித்த 'பாவ கதைகள்' திரைப்படம் பெரிதும் பேசப்பட்டது.
இவரின் நடிப்பு திறமை அதிகமாக பேசப்பட்டாலும் இவர் நடித்த திரைப்படங்கள் ஹிட்டாகவில்லை. இதனால் துணை கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கிய சாந்தனு 'மாஸ்டர்' திரைப்படத்தில் பார்கவ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அடுத்ததாக சாந்தனு நடிப்பில் வெளியாகவிருக்கும் 'இராவணர் கோட்டம்' என்ற திரைப்படத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் சாந்தனு கலந்து கொண்டார். அங்கு பத்திரிகையாளர் கூட்டத்தில் பைல்வான் சாந்தனுவிடம் 'பாக்கியராஜ் சார் வரவில்லையா' என்று நக்கலாகக் கேட்டிருக்கிறார். அதற்கு பதிலளித்த சாந்தனு, "இது அவரின் படம் இல்லை. இந்த படத்திற்கு அவர் ஏன் வரவேண்டும்? நீங்கள் எப்போதும் சர்ச்சைகளை ஏற்படுத்தும் வகையில் தான் பேசுவீர்கள். இப்போது நீங்கள் எதைப் பேசினாலும் அந்த படத்திற்கு பிரமோஷனாக தான் இருக்கும் என்று கூறியதால் பயில்வானின் முகம் தொங்கிப்போனது.