மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மறைந்த பாடகி லதா மங்கேஷ்கருக்கு இறுதி அஞ்சலி! சர்ச்சையில் சிக்கிய ஷாருக்கான்! ஏன்?? வைரலாகும் வீடியோ!!
பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் அவர்கள் உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். அவரது மறைவு இந்தியாவையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
லதா மங்கேஸ்கர் 36 மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார். மேலும் பல விருதுகளையும் பெற்றுள்ளார். அவர் சினிமாத்துறையில் 60 ஆண்டுகளுக்கு மேலாக பல மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார்.
இவ்வாறு முன்னணி பாடகியாக கொடிகட்டிப் பறந்த லதா மங்கேஷ்கர் அவர்களின் மறைவு திரையுலகையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அவரது மறைவிற்கு பல பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். நேரில் சென்று அஞ்சலியும் செலுத்தியுள்ளனர்.
क्या इसने थूका है ❓ pic.twitter.com/RZOa2NVM5I
— Arun Yadav (@beingarun28) February 6, 2022
இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக்கான் தனது செயலாளர் பூஜா என்பவருடன் வந்து லதா மங்கேஷ்கருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். அப்பொழுது அவர் அவரது உடலுக்கு முன்பு நின்று இஸ்லாமிய முறைப்படி துவா செய்துள்ளார். பின்னர் மாஸ்க்கை எடுத்துவிட்டு காற்றில் ஊதியுள்ளார். இந்நிலையில் இஸ்லாமிய முறைப்படி ஷாருக்கான் செய்தது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு ஷாருக்கான் லதா மங்கேஷ்கரின் உடலில் எச்சில் துப்பியதாக சர்ச்சைகள் எழுந்துள்ளது.