மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆஹா! விஜய் சேதுபதிக்கு இப்படி ஒரு பாராட்டா! அனைவரையும் ஆச்சர்யபடுத்திய ஷாருக்கான்
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வரும் இந்திய திரைப்பட விருதுகள் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஷாருக்கான் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை பாராட்டியுள்ளார்.
தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் எந்த கதாபாத்திரத்தையும் ஏற்று நடிக்கும் திறமை கொண்டவர் விஜய் சேதுபதி. இவரை தமிழக ரசிகர்கள் ஆசையோடு மக்கள் செல்வன் என்று அழைத்து வருகின்றனர்.
இவரது நடிப்பில் கடைசியாக சிந்துபாத் திரைப்படம் வெளியானது. இதில் அவரது மகனும் நடித்திருந்தார். அதற்கு முன்னதாக பல நட்சத்திரங்கள் நடித்த சூப்பர் டீலக்ஸ் படம் வெளியானது. தியாகராஜன் குமாரராஜா இயக்கிய படத்தில் விஜய் சேதுபதி வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த படம் இந்திய திரைப்பட விருது விழாவில் கௌரவிக்கப்பட்டது. சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதினை விஜய் சேதுபதி பெற்றார். மேலும் அந்த படம் சமத்துவத்திற்காக விருதும் பெற்றது.
அந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் விஜய் சேதுபதியை பற்றி மிகவும் பெருமையாக பேசியுள்ளார். தன் வாழ்நாளில் பார்த்த நடிகர்களிலேயே மிகவும் சிறந்த நடிகர் விஜய் சேதுபதி தான் என ஷாருக்கான் கூறியுள்ளார்.