மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குட்டி பாகுபலியாய் மாறிய சில்பா ஷெட்டியின் மகன்! வைரலாகும் வீடியோ
பாலிவுட் நடிகை சில்பா ஷெட்டியின் மகன் வியான், பாகுபலி படத்தில் வரும் 'யாரு இவன் யாரு இவன்' பாடலுக்கு கல்லுக்கு பதிலாக வீட்டில் இருந்த நாற்காலியை தூக்கி நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது.
இந்தி, தெலுங்கு, கன்னடம், தமிழ் என ஏறக்குறைய 40 படங்களுக்கு மேல் நடித்து புகழ் பெற்றவர் நடிகை சில்பா ஷெட்டி. ஷில்பா சந்தேகத்திற்கு இடமாக மாஃபியாவுடன் தொடர்பு உள்ளிட்ட பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.
இவர் 2007 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் செலிபிரிட்டி பிக் பிரதர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். அதில் 63% வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இவர் தான் காதலித்த ராஜ்குந்த்ராவையே திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு வியான் என்ற மகனும் உள்ளார்.
சில்பா ஷெட்டியின் மகன் வியான், பாகுபலி படத்தில் வரும் 'யாரு இவன் யாரு இவன்' பாடலுக்கு கல்லுக்கு பதிலாக வீட்டில் இருந்த நாற்காலியை தூக்கி நடனமாடும் வீடியோ ஒன்றை, சில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த சிறுவன் ஆடும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.