என்னோட பீஸ்ட் இதுதான்.. உச்சகட்ட குஷியில் பிக்பாஸ் ஷிவானி! அப்படி என்னதான் விஷேசம்னு தெரியுமா??



Shivani bought new BMW car

விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற தொடரில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் ஷிவானி. அதனைத் தொடர்ந்து அவர் கடைக்குட்டி சிங்கம் மற்றும்  ரெட்டை ரோஜா போன்ற சீரியல்களில் ஹீரோயினாக நடித்தார். ஆனால் சில காரணங்களால் அவற்றிலிருந்து அவர் பாதியிலேயே விலகினார்.

பின்னர் ஷிவானி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். பிக்பாஸ் வீட்டில் ஷிவானி சக போட்டியாளரான பாலாவுடன் காதல் சர்ச்சையில் சிக்கினார். பின்னர் FREEZE டாஸ்க்கின் போது உள்ளே வந்த அவரது அம்மா கண்டித்ததை தொடர்ந்து அவர் விளையாட்டில் கவனம் செலுத்த துவங்கினார்.

ஷிவானி சமூகவலைதளங்களில் பிஸியாக இருக்கக் கூடியவர். அவர் அவ்வபோது தனது போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் நடன வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவார். இந்நிலையில் ஷிவானி தற்போது 
புதிதாக பி.எம்.டபிள்யூ 7 சீரிஸ் காரை வாங்கியுள்ளார். அந்த புகைப்படத்தை அவர்  என்னோட புதிய பீஸ்ட் என பதிவிட்டு வெளியிட்டுள்ளார். அதனை தொடர்ந்து பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.