மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடச்சீ... வெள்ளத்தில் சென்னை மக்கள் தத்தளிக்க ஷிவானி செய்த செயல்... திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்!! வீடியோ இதோ
விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியலில் நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானவர் நடிகை ஷிவானி. அதனை தொடர்ந்து அவர் விஜய் டிவியில் கடைக்குட்டி சிங்கம் மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ரெட்டைரோஜா என்ற தொடர்களில் நடித்துள்ளார். ஆனால் சில காரணங்களால் அவர் அந்த சீரியல்களில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.
பின் ஷிவானி பிக்பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டார். அதன் மூலம் மக்கள் மத்தியில் பெரும் அளவில் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்த நிலையில் அவர் விக்ரம் படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதியின் 3 வது மனைவியாக நடித்தார். தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
இதற்கிடையில் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானி அவ்வப்போது எல்லை மீறிய கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைப்பார். இந்த நிலையில் தற்போது சென்னை வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருக்க குட்டை டிரவுசரில் மிக்ஜாம் புயலை ரசித்தபடி மனசுக்குள் ஒரு புயல் மையம் கொண்டதே என்ற பாடலுக்கு மழையில் ஆட்டம் போட்ட வீடியோ வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் செம கடுப்பாகி ஷிவானியை கடுமையாக திட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.