கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
நள்ளிரவில் அரங்கேறிய கொடூர சம்பவம்.. தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி!
நெல்லையில் கொடூரம்
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் செய்யது தாமின். இவர் வி எஸ் டி பள்ளிவாசல் அருகே ஆன்லைன் சர்வீஸ் சென்டர் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு தனது வேலையை முடித்துவிட்டு, வீட்டிற்கு சென்று சாப்பிட்டுவிட்டு, வேலை இருப்பதாக கூறிவிட்டு மீண்டும் கடைக்கு வந்துள்ளார்.
தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி
இதனையடுத்து கடைக்கு சென்ற மகன் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால், சந்தேகமடைந்த அவரது பெற்றோர், தனது மகனின் மொபைல் நம்பருக்கு தொடர்பு கொண்டனர். ரொம்ப நேரமாக செல்போனை எடுக்காததால் அவரது தந்தை கடைக்கு சென்றுள்ளார்.
இதையும் படிங்க: ஒரு தலை காதல் விவகாரம்.. தந்தையை கொன்று பெண்ணை கடத்தி சென்ற இளைஞர்!
அங்கு கடையில் உள்ள கதவுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து, உள்ளே சென்று பார்த்த போது அவரது மகன் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். தனது மகன் சடலமாக கிடைப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை கத்தி கூச்சலிட்டார்.
போலீசார் வழக்குப் பதிவு
இந்த சம்பவம் குறித்து மேலப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் செய்யது தாமினின் உருளைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: குடித்துவிட்டு தினமும் டார்ச்சர்.. கடப்பாரையால் ஒரே அடி.. கணவரை கொன்று தூக்கிய மனைவி.!