மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அப்பாவைப் போலவே.. தொகுப்பாளினியாக களமிறங்கும் நடிகை ஸ்ருதிஹாசன்! எந்த நிகழ்ச்சியில் தெரியுமா??
தமிழில் ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். அதனைத் தொடர்ந்து அவர் விஜய், அஜித், சூர்யா,விஷால்,தனுஷ் என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். அவர் தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
ஸ்ருதிஹாசன் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். அவர் பிரபாஸுடன் சேர்ந்து சலார் என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். நடிகை ஸ்ருதிஹாசன் நடிகை மட்டுமின்றி பாட்டு, நடனம் என பன்முகத்தன்மை கொண்டவர். இந்த நிலையில் அவர் தற்போது தொகுப்பாளினியாகவும் களமிறங்க உள்ளார்.
அதாவது நடிகை ஸ்ருதிஹாசன் தெலுங்கில் அமேசான் ஓடிடி தளத்தில் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் எனவும் கூறப்படுகிறது. நடிகை ஸ்ருதிஹாசன் இதற்கு முன்பு சன் டிவியில் ஹலோ சகோ என்ற நேர்காணல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரது அப்பா கமல்ஹாசன் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.