மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகர் சிபிராஜ்க்கு இவ்வளவு பெரிய மகனா? தேசிய அளவில் அவர் படைத்த சாதனையை பார்த்தீர்களா! உற்சாகத்தில் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் ஸ்டூடண்ட் நம்பர் ஒன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் இடையே பெருமளவில் பிரபலமானவர் நடிகர் சிபிராஜ். இவர் பிரபல முன்னணி நடிகர் சத்யராஜின் மகன் ஆவார். அதனை தொடர்ந்து சிபிராஜ் தனது தந்தையுடன் சேர்ந்து ஜோர், மண்ணின் மைந்தன், வெற்றிவேல் சக்திவேல், கோவை பிரதர்ஸ் என ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
பின்னர் பட்டாசு, நாணயம்,நாய்கள் ஜாக்கிரதை, போக்கிரி ராஜா போன்ற படங்களில் நடித்துள்ளார் மேலும் அவரது தந்தையைப் போலவே அவருக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சிபிராஜின் மனைவி ரேவதி இவர்களுக்கு தீரன் என்ற மகன் உள்ளார்.
அவர் புனேவில் நடைபெற்ற தேசிய அளவிலான டேக்வோண்டா போட்டியில் கலந்துகொண்டு இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். டேக்வோண்டா என்பது கொரிய நாட்டின் தற்காப்புக் கலை ஆகும். அதில் கலந்து கொண்டு தீரன் தேசிய அளவில் சாதனை படைத்துள்ளார்.
இதனால் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அடைந்த சிபிராஜ் தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்டு மிகுந்த மகிழ்ச்சியுடன் அவருக்கு வாழ்த்து கூறியுள்ளார். மேலும் இப்புகைப்படம் வைரலாக நிலையில் அவரது ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.