மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அவனா நீ? "சீ" உன்னை நல்லவன்னு நினைத்தேனே!. கடுப்பான நடிகர் சித்தார்த்!.
கடந்த சில தினங்களாக சில பிரபலங்கள் மீது, பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பாடகி சின்மயி செய்திகளை வெளியிட்டு வருகிறார்.
இதில் கவிஞர் வைரமுத்து, நடிகர் ராதாரவி, நடன இயக்குனர் கல்யாண், பாடகர் கார்த்திக் மற்றும் தமிழ்நாடு பிராமணர் சங்கத் தலைவர் நாராயணன் எனப் பல பிரபலங்கள் பெயர் அடிபட்டது.
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது கவிஞர் வைரமுத்து தன்னை படுக்கைக்கு அழைத்தார் என பரபரப்பான குற்றச்சாட்டை பாடகி சின்மயி கூறினார்.
இதனையடுத்து மீடூ சர்ச்சை தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நடிகர் மாரிமுத்துவை விமர்சித்து நடிகர் சித்தார்த் கோவமாக டுவிட் செய்துள்ளார்.
Indha asingam pudichavar #PariyerumPerumal la kettavana nalla nadichaarnnu nenachen. Avane dhaana nee? Chi! https://t.co/XsAmouKtLG
— Siddharth (@Actor_Siddharth) 29 October 2018
சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், வைரமுத்து ஒரு ஆம்பிளை. அவர் ஒரு பெண்ணை படுக்கைக்கு கூப்பிட்டதில் தவறு என்ன இருக்கிறது. ஒரு ஆணை கூப்பிட்டிருந்தால் தான் அது தவறு என கூறியிருந்தார்.
விருப்பமுள்ளவர்கள் படுக்கைக்கு வருவார்கள். விருப்பம் இல்லாதவர்கள் இதுபோல் ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பார்கள். இந்த பாலியல் புகார் விவகாரத்தில், வைரமுத்துவின் புகழுக்கு சிறிதளவு கூட இழுக்கு வரவாய்ப்பில்லை என கூறினார்.
மாரிமுத்துவின் இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. மீடூ இயக்க ஆதரவாளர்கள் பலர், மாரிமுத்து சொன்ன பதிலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தற்போது, நடிகர் சித்தார்த்தும் இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் "இந்த அசிங்கம் புடிச்சவர் பரியேறும் பெருமாள் படத்துல கெட்டவனா நல்லா நடிச்சார்னு நினைச்சேன். அவனே தான நீ? சீ..." என்று சித்தார்த் தனது ட்வீட்டில் பகிர்ந்துள்ளார்.