மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஓமைக்ரான் பரவல்! நடிகர் சிம்பு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! பெரும் ஏமாற்றத்தில் ரசிகர்கள்!!
சிம்பு நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மாநாடு. இந்தத் திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். மேலும் அதில் கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி மற்றும் எஸ்.ஜே சூர்யா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.
இதனால் சிம்பு ரசிகர்கள் மற்றும் படக்குழுவினர்கள் அனைவரும் பெரும் உற்சாகம் அடைந்தனர். மேலும் அண்மையில் மாநாடு படக்குழு சக்ஸஸ் மீட்டிங்கும் நடத்தியது. அப்பொழுது சிம்பு, கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் வெந்து தணிந்தது காடு படப்பிடிப்பில் இருந்ததால் அவரால் அந்த விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை. இந்த நிலையில் வரும் ஜனவரி 6-ந்தேதி சிம்பு சென்னையில் தனது ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில் அவர் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ஜனவரி 6 ஆம் தேதி நடக்கவிருந்த மாநாடு படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் ஓமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் காரணத்தால், ரசிகர்களின் நலன் கருதி தள்ளி வைக்கப்படுவதாகவும், விழா நடக்கும் தேதி மீண்டும் அதிகார பூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.