அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
கோ படத்தில் சிம்புவா? அதுவும் இவ்ளோ சீனில் நடிச்சிருக்காரா! லீக்கான சர்ப்ரைஸ் புகைப்படங்கள்!!
தமிழ் சினிமாவில் அயன், கோ, மாற்றான், அனேகன், கவண், காப்பான் என வித்தியாசமான ஏராளமான சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் கேவி ஆனந்த். இவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது இழப்பு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.
கேவி ஆனந்த் இயக்கத்தில் ஜீவா, கார்த்திகா ஆகியோர் நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் கோ. இந்த திரைப்படத்தில் முதலில் நடிகர் சிம்புதான் ஹீரோவாக நடிக்கவிருந்தாராம். ஆனால் ஒரு சில காரணங்களால் அந்தப் படத்திலிருந்து விலகி விட்டாராம்.
இந்நிலையில் கேவி ஆனந்துக்கு இரங்கல் தெரிவித்து சிம்பு வெளியிட்ட அறிக்கையில், கோ படத்தை மிஸ் செய்தது தனக்கு வருத்தமானது என்றும் ஆனால் கண்டிப்பாக விரைவில் அவருடன் பணிபுரிய திட்டமிட்டிருந்ததாகவும் ஆனால் அதற்குள் அவர் மறைந்துவிட்டார் என்றும் வருத்தத்துடன் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் கோ படத்தில் அவர் நடித்த சில காட்சிகளின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.