"காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
ரஜினியால் 18 வருடங்களுக்கு பிறகு இணையும் தோழிகள்..!
பிரவீன்காந்த் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஜோடி. இந்த படத்தில் பிரசாந்திற்கு ஜோடியாக சிம்ரன் நடித்தார். இதே படத்தில் சிம்ரனுக்கு ஜோடியாக அறிமுகமானவர் தான் நடிகை த்ரிஷா.
அதன்பிறகு சிம்ரனும் த்ரிஷாவும் இணைந்து நடித்ததே இல்லை. இந்நிலையில் இவர்கள் மீண்டும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு இப்பொது கிடைத்துள்ளது. அதுவும் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன்.
ரஜினிகாந்தின் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார்.
இந்த படத்தில் நடிக்க ரஜினிகாந்திற்கு ரூ. 65 கோடி சம்பளம் வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்க இருப்பதாக தகவல் வந்தது.
இந்நிலையில் தற்போது ரஜினிக்கு ஜோடியாக த்ரிஷாவும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. த்ரிஷாவுக்கு ரஜினியுடன், ஜோடி சேர்ந்து நடிக்க நீண்ட நாள் கனவாகும்.
அதேநேரத்தில் 18 வருடங்களுக்கு பிறகு சிம்ரனும், திரிஷாவும் ஒரே படத்தில் இணைகின்றனர். திரிஷா, பிரசாந்த் நடித்த ஜோடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தில் பிரஷாந்த் ஜோடியாக சிம்ரன் நடித்திருப்பார். சிம்ரனின் தோழியாக திரிஷா நடித்திருப்பார். இதை தொடர்ந்து சிம்ரனும், திரிஷாவும் ரஜினி படத்தில் இணைகின்றனர்.
ரஜினிகாந்திற்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டன.