மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
Siragadikka Aasai: விஜயாவுக்கு அடுத்த ஆப்பு ரெடி; செக் வைத்த முத்து & ரவி.! அசத்தல் ப்ரோமா.!!
விஜய் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடர்களில், தற்போது மக்களின் பேராதரவை பெற்றுள்ள சிறகடிக்க ஆசை (Siragadikka Aasai Promo), தொடர்ந்து பரபரப்பான காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நெடுந்தொடரில் கடந்த வாரம் வரை, அம்மா விஜயா முத்து - மீனா தம்பதிகளை வீட்டில் இருந்து வெளியேற்றும் பல முயற்சிகளில் ஈடுபடுகிறார்.
அதேநேரத்தில், முதல் திருமணம் மற்றும் குழந்தை தொடர்பான உண்மையை மறைத்து மனோஜை திருமணம் செய்த உண்மை அம்பலமாகிவிடுமோ என்ற பயத்தில் இருந்த ரோகினி, தற்போது குழந்தை பெற்றுக்கொள்ள ஆயத்தமாகி வருகிறார். அதே நேரத்தில், ரோகிணியின் மகன் கிரிஷ் குறித்த விவகாரம் எப்போது தெரியவரும் என்ற பரபரப்பும் எழுந்துள்ளது.
இதனிடையே, முத்துவை தொடர்ந்து வில்லனாக சித்தரிக்க நினைக்கும் ரோகிணி, பல்வேறு சூழ்ச்சிகள் செய்கிறார். அதன் ஒரு பகுதியாக ரவியின் மனைவியான பலகுரல் சுருதியின் அம்மாவை பார்த்து விஜயா சூழ்ச்சியை அரங்கேற்ற, அவர் மீனாவிடம் சண்டையிடுகிறார்.
இதையும் படிங்க: பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து கமல் வெளியிட்ட அறிவிப்பு? சோகத்தில் ரசிகர்கள்!
இதனால் ஆவேசமடைந்த முத்து, தனது மனைவியை வீட்டிற்கு அழைத்து வந்து ரவி மற்றும் அவரது மனைவியிடம் சண்டையிடுகிறார். தான் நினைத்த காரியம் நிறைவேறியதாக விஜயா மகிழ, அறைக்குள் ரவி மற்றும் முத்து ஆகியோர் சூழ்ச்சியை புரிந்துகொண்டு சண்டையிட்டது போல் நடிக்கின்றனர். இதனை தெரியாத விஜயாவுக்கு அடுத்த வாரம் என்ன ஆப்பு காத்திருக்கப்போகிறது என்பது தான் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது.
அடுத்த வாரத்திற்கான கலக்கல் ப்ரோமோ இதோ
இதையும் படிங்க: ஏமாற்றி திருமணம் செய்த விஜய் டிவி பிரபலம்.. பரபரப்பை ஏற்படுத்திய பிரபலத்தின் மனைவி!