அடேங்கப்பா..! சம்பளத்தில் சூர்யாவை நெருங்கும் சிவகார்த்திகேயன்..! அடுத்த படத்தில் சம்பளம் எவ்வளவு தெரியுமா.?



Siva Karthikeyan next movie salary

தமிழ் சினிமாவில் அசுர வளர்ச்சி பெறும் நடிகர்களில் ஒருவராக உள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு என்ற நிகழ்ச்சியில் மிமிக்கிரி கலைஞராக அறிமுகமாகி பின்னர் நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகத் தன்மையுடன் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்த இவர் இன்றைய தமிழ் சினிமாவின் மிக முக்கியமான பிரபலமான நடிகர்களில் ஒருவராக உள்ளார்.

surya

குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து உள்ள இவர் அசைக்க முடியாத இடத்தில் உள்ளார். தற்போது டாக்டர் என்ற படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கவிருக்கும் படத்திற்கு 22 கோடி சம்பளம் பேசி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர்களில் ஒருவராக இருக்கும் சூர்யா ஒரு படத்திற்கு 30 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படும் நிலையில் சிவகார்த்திகேயன் விரைவில் சூர்யாவை பின்னுக்குத்தள்ளி அவருடன் அதிக சம்பளம் வாங்கினாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.