இயக்குனர் பாலாவின் அடுத்த படம் இதுதானா! பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்! ஹீரோ யார்னு பார்த்தீங்களா!



sivakarthickeyan-release-visithiran-movie-first-look-po

கடந்த 2018 ஆம் ஆண்டு மலையாளத்தில் பத்மகுமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் ஜோஷப். இதில் ஜோஜு ஜார்ஜ், மாளவிகா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் தேசிய விருதை பெற்று தந்தது.

 இந்நிலையில் இப்படத்தை இயக்குனர் பாலா தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழில் ரீமேக் செய்துள்ளார். மேலும் மலையாளத்தில் ஜோஷப் படத்தை  இயக்கிய பத்மகுமாரே தமிழ் ரீமேக்கையும் இயக்கவுள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

விசித்திரன் என பெயரிடப்பட்டுள்ள இதில் கதாநாயகனாக ஆர்.கே. சுரேஷ் நடித்துள்ளார்.  இந்த நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளார். மேலும் படப்பிடிப்புகள் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் படம் வெளியாவது குறித்த தகவல் விரைவில் வெளிவரும் என ரசிகர்களால் பெருமளவில் எதிர்பார்க்கப்படுகின்றது.