மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அரபிக்குத்து பாடல் என்னோடது கிடையாது.. இதுதான் நடந்தது! சீக்ரெட்டை போட்டுடைத்த சிவகார்த்திகேயன்!!
தமிழ் சினிமாவில் தொகுப்பாளராக களமிறங்கி மக்கள் மனதைக் கவர்ந்து, பின்பு வெள்ளித்திரையில் ஹீரோவாக அவதாரம் எடுத்து தனது கடின உழைப்பால் தற்போது முன்னணி நட்சத்திரமாக கொடிகட்டி பறப்பவர் சிவகார்த்திகேயன். இவருக்கு என ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவரது படங்கள் என்றால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பார்ப்பர்.சிவகார்த்திகேயன் ஹீரோவாக மட்டுமின்றி தயாரிப்பாளர் மற்றும் பாடலாசிரியராகவும் வலம் வருகிறார்.
டாக்டர் படத்தில் இவர் எழுதிய 'செல்லம்மா செல்லம்மா' பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அதனைத் தொடர்ந்து அவர் பீஸ்ட் படத்தில் அரபிக்குத்து பாடலை எழுதியிருந்தார். அனிருத் இயக்கத்தில் வெளிவந்த இந்தப் பாடல் வெளியாகி பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது. திரையுலப் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் அந்தப் பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு வந்தனர்.
இந்நிலையில் தற்போது அரபிக்குத்து பாடல் அனிருத்தின் பாடல் என கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சிவகார்த்திகேயன் கூறுகையில், அனிருத் அரபி வார்த்தைகளை எல்லாம் சேர்த்து ஃபுல்லா பாட்டு அமைத்து எனக்கு அனுப்பியிருந்தார். அதில் நான்
சில வார்த்தைகளை மட்டும் நீக்கி தமிழ் வார்த்தைகளை சேர்த்துள்ளேன் எனவும் கூறியுள்ளார். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.