மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரபல இயக்குனரின் படத்திற்கு சம்பளமே வேண்டாம் என கூறிய நடிகர் சிவகார்த்திகேயன்! எந்த படம் தெரியுமா?
நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையான விஜய் டிவியின் மூலம் தொகுப்பாளராக சினிமா துறையில் அறிமுகமானவர். அதன் பிறகு தனது கடின உழைப்பால் உயர்ந்து வெள்ளிதிரையில் காலடி பதித்து இன்று முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருகிறார்.
இவரின் படங்கள் அனைத்தும் மக்கள் ரசிக்கும் வகையில் இருக்கும். இவருக்கு முதலில் குழந்தைகள் ரசிகர்கள் தான் அதிகம் உருவானது. அதன் பிறகு தான் அனைவரும் இவருக்கு ரசிகர்களாக உருவாகினார்கள்.
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் வசூல் ரீதியாகவும் சாதனைகளை படைத்தது. அடுத்தாக இவரின் ஹுரோ படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் தற்போது இவர் நடித்து பைனான்ஸ் பிரச்சனை காரணமாக பாதியிலேயே நின்று கிடக்கும் சயின்ஸ் பிசஷன் படத்திற்கு சம்பளமே வேண்டாம் என கூறியுள்ளார் சிவகார்த்திகேயன். இப்படத்தின் இயக்குனர் இன்று நேற்று நாளை புகழ் ரவிகுமார்.
இப்படத்தின் படப்பிடிப்பானது 75 சதவீதம் நிறைவடைந்ததை அடுத்து பேலன்ஸ் உள்ள படத்தை வரும் ஜனவரி மாதம் துவங்கயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.