அட..இப்படியும் ஒரு மனுசனா!! பண நெருக்கடி! ஏழைகளுக்கு உதவ வில்லன் நடிகர் சோனு சூட் செய்துள்ள காரியத்தை பார்த்தீர்களா!



sonu sood mortgaged 8 properties to help poor people

தமிழ்சினிமாவில் கள்ளழகர், கோவில்பட்டி வீரலெட்சுமி, சந்திரமுகி, ஒஸ்தி, தேவி உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார் நடிகர் சோனு சூட். இவர் பாலிவுட்டிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக உள்ளார். இவர் திரையுலகில் வில்லனாக நடித்தாலும் நிஜத்தில் நல்ல உள்ளம் படைத்த ஹீரோவாவார். 

இவர் கொரோனா பரவலால் ஊரடங்கு பிறப்பிக்கபட்ட நிலையில் , கொரோனோவை ஒழிக்க பாடுபடும் மருத்துவர்கள், நர்ஸுகள் மற்றும் தூய்மைப்பணியாளர்கள் தங்குவதற்காக தனது 5 நட்சத்திர ஹோட்டலை வழங்கினார். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அவர்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப வாகனங்கள் ஏற்பாடு செய்து கொடுப்பது, வெளிநாட்டில் தவித்த மாணவர்களை தனி விமானத்தின் மூலம் தாய்நாட்டிற்கு அழைத்து வந்தது, விவசாயிகளுக்கு உதவுவது என தொடர்ந்து ஏராளமான உதவிகளை செய்து வந்துள்ளார்.

corono

இந்த நிலையில் கொரோனா சமயத்தில் திரைப்பட வாய்ப்புகளும் இல்லாததால், அவருக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் தனது பெயரிலும், தனது மனைவி சோனாலி பெயரிலும் உள்ள இருகடைகள் மற்றும் 6 குடியிருப்புகளை 10 கோடிக்கு அடமானம் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கியிடம் கடந்த செப்டம்பர் 15ம் தேதி 10 கோடி லோன் கேட்டு இருப்பதாகவும் மணி கண்ட்ரோல் வர்த்தக செய்திதளம் தகவலை வெளியிட்டுள்ளது.