மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இறுதிச்சடங்கு தொடங்கியது.! பாடும் நிலவு உடல் மண்ணிற்குள் மறைகிறது.!
பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனா தொற்று காரணமாக ஆகஸ்ட் 5-ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்தநிலையில், திடீரென நேற்று முன்தினம் அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
இந்தநிலையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் திரைப்பிரபலங்கள் மற்றும் இந்திய ரசிகர்கள் அனைவர் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் எஸ்பிபி உடல் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் நேற்று மாலை அவரது வீட்டுக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு அவருடைய உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள்அஞ்சலி செலுத்தினர்.
இதனையடுத்து நேற்று இரவு 8 மணிக்கு எஸ்பிபி அவர்களின் உடல் சென்னை செங்குன்றத்தை அடுத்த தாமரைப்பாக்கத்தில் உள்ள அவருடைய பண்ணை வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. பண்ணை வீட்டில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று கூறப்பட்ட நிலையில், தற்போது பொதுமக்களுக்கும் சில கட்டுப்பாடுகளுடன் அஞ்சலி செலுத்த அனுமதி வழங்கப்பட்டு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பலரும் இணையம் வாயிலாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பண்ணை வீட்டில் இறுதிச்சடங்குகள் தொடங்கியுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் 11 மணிக்கு மேல் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.