அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
ஒரு குழந்தைக்கு அம்மாவான நிலையில், பிரபல தொகுப்பாளினி செய்த காரியம் வைரலாகும் புகைப்படம்
பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்ததன் மூலம் அனைவரையும் பெருமளவில் கவர்ந்தவர் அமித் பார்கவ். இவர் என்னை அறிந்தால், மிருதன் படத்தில் ஒரு சீனில் மட்டும் நடித்திருப்பார். மேலும் அவர் நெஞ்சம் மறப்பதில்லை என்ற தொடரில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மேலும் பிரபலமானார்.
இந்நிலையில் இவர் தொகுப்பாளனி ஸ்ரீரஞ்சனியை திருமணம் செய்துகொண்டார். ஸ்ரீ ரஞ்சனி கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் மற்றும் சூப்பர் சிங்கர் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இந்நிலையில் இந்த ஜோடிக்கு கடந்த மே 7ம் தேதி அக்ஷய திருதியை அன்று பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் குழந்தை பிறந்த பிறகு உடல் எடை அதிகரித்த நிலையில், சிவரஞ்சனி உடல் எடையை குறைப்பதற்காக தற்பொழுது தீவிர உடற்பயிற்சி மற்றும் யோகா ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அவர் யோகா பயிற்சி செய்யும் புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதனைக் கண்ட ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.