மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
AK63 : உச்சத்தை தொட்ட அஜித்தின் சம்பளம்.! வாய்பிளக்கும் பிரபலங்கள்.!
அஜித்குமார் நடிப்பில், இந்த வருடம் தொடக்கத்தில் வெளியான துணிவு திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்தது. இதனைத் தொடர்ந்து, இவருடைய நடிப்பில், விடாமுயற்சி என்ற திரைப்படம் அடுத்ததாக தயாராகி வருகிறது.
மகிழ் திருமணி என்பவர் இயக்கும் இந்த திரைப்படத்தை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. அதோடு, அர்ஜுன், திரிஷா, ஆரவ், பிரியா பவானி சங்கர், ரெஜினா உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.
இந்த திரைப்படத்திற்கு பிறகு அஜித் நடிக்கவுள்ள அவருடைய 63 வது திரைப்படம் தொடர்பான பல்வேறு தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள இந்த திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும் இதுவரையில் இதுப்பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.
இந்த சூழ்நிலையில் தான், இந்த திரைப்படத்திற்காக முதலில் அஜித்துக்கு 162 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் தற்போதைய தகவலின்படி இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு நடிகர் அஜித்குமாருக்கு 165 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கிறது.