மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதலர் தினத்தை கோலாகலமாக கொண்டாடிய பிக்பாஸ் பிரபலம்! வைரலாகும் புகைப்படத்தால் ஷாக் ஆன ரசிகர்கள்.!
14 வயதில் சினிமாத்துறையில் அறிமுகமாகி இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருப்பவர் சுஜா வருணி . இவர் சினிமாவில் முதலில் நாயகியாக அறிமுகமானாலும், ஒற்றை பாடலுக்கு தான் இவர் அதிகமாக நடனமாடி இருக்கிறார்.
இதை தொடர்ந்து திரையுலகில் தனக்கென ஒரு முக்கிய இடத்தை பிடிக்க போராடிக் கொண்டிருந்த சுஜா வருணி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மேலும் பிரபலமானார்.
இந்நிலையில் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய சுஜா வருணி, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், ராம்குமாரின் மகனுமான சிவகுமாரை காதலித்து கடந்த ஆண்டு நவம்பர் 19ம்தேதி திருமணம் செய்துக்கொண்டார்.
மேலும் திரையுலக பிரபலங்கள் பலரும் அவர்களது திருமண விழாவில் கலந்துகொண்டு அவர்களுக்கு வாழ்த்து கூறினர்.
இந்நிலையில் திருமணத்திற்கு பின், சுஜா அவரது கணவருடன் இணைந்து இன்று காதலர் தினத்தை கோலாகலமாக கொண்டாடினார். மேலும் அத்தகைய புகைப்படங்களை சுஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.