மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதலனை கரம்பிடித்த பிக்பாஸ் சுஜா, மாப்பிளை யார் தெரியுமா? வைரலாகும் திருமண புகைப்படம் உள்ளே.!
14 வயதில் சினிமாத்துறையில் அறிமுகமாகி இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருப்பவர் சுஜா வருணி . இவர் சினிமாவில் முதலில் நாயகியாக அறிமுகமானாலும், ஒற்றை பாடலுக்கு தான் இவர் அதிகமாக நடனமாடி இருக்கிறார்.
இதை தொடர்ந்து திரையுலகில் தனக்கென ஒரு முக்கிய இடத்தை பிடிக்க போராடிக் கொண்டிருந்த சுஜா வருணி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மேலும் பிரபலமானார்.
இந்நிலையில் சுஜா வருணியும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், ராம்குமாரின் மகனுமான சிவகுமாரை காதலிப்பதாக செய்திகள் வெளியாகியது.
பின்னர் சிவகுமாரே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தானும், சுஜா வருணியும் காதலிப்பதாக பதிவு செய்திருந்தார். மேலும் நவம்பர் 19ம்தேதி திருமணம் செய்யவுள்ளதாகவும் அறிவித்திருந்த நிலையில் அவர்களது திருமணம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
மேலும் திரையுலக பிரபலங்கள் பலரும் அவர்களது திருமண விழாவில் கலந்துகொண்டு அவர்களுக்கு வாழ்த்து கூறினர்.
இந்நிலையில் அவர்களது திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
v