மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"காணாமல் போன பணிப்பெண்ணின் மகளைக் கண்டுபிடித்து கொடுத்தால் சன்மானம்!" சன்னி லியோன்
பாலிவுட் நடிகையும், பெண் தொழிலதிபருமான சன்னி லியோன் 2012ம் ஆண்டு பூஜா பட் இயக்கிய 'ஜிஸ்ம் 2' என்ற திரைப்படத்தில் முதன் முதலில் பாலிவுட்டில் அறிமுகமானார். 2014ம் ஆண்டு "வடகறி" படத்தில் தமிழில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார்.
முன்னதாக ஆபாசத் திரைப்படங்களில் நடித்து வந்த சன்னி லியோன், தற்போது குழந்தைகளை தத்தெடுப்பது, சமூக நலத்தொண்டுப் பணிகளில் ஈடுபடுவது போன்ற செயல்களில் தொடர்ந்து சமூக அக்கறையுடன் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில், "எனது வீட்டில் பணிபுரியும் பெண்ணின் 9 வயது மகள் அனுஷ்கா கிரண் மொரேவை நேற்று மாலையில் இருந்து காணவில்லை. அவரை பாதுகாப்பாக அழைத்து வந்து விடுபவர்களுக்கு நான் தனிப்பட்ட முறையில் 50000 ரூபாய் கொடுப்பேன்" என்று கூறியிருந்தார்.
மேலும் அப்பதிவில் மும்பை காவல்துறையை டேக் செய்து, காணாமல் போன சிறுமியின் புகைப்படத்தையும், அவரது பெற்றோர்களின் விவரங்களையும் பகிர்ந்துள்ளார் சன்னி லியோன். இந்த ஆண்டு மட்டும் மஹாராஷ்டிராவில் 3 மாதங்களில் 3594 பெண்கள் காணாமல் போயுள்ளனர் என்பது கூடுதல் தகவல்.