மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"வெப் சீரிஸில் நடிக்கிறாரா சன்னி லியோன்!" வெளியான தகவல்!
முன்னாள் ஆபாசப் பட நடிகையாக அறியப்படுபவர் சன்னி லியோன். இவர் கனடாவில் தொழிலதிபராகவும் உள்ளார். 2004ம் ஆண்டு "தி கேர்ள் நெக்ஸ்ட் டோர்" என்ற ஆங்கிலப் படத்தில் அறிமுகமானார். 2012ம் ஆண்டு ஜிஸ்ம் 2 என்ற ஹிந்திப் படத்தில் அறிமுகமானார்.
2014ம் ஆண்டு தமிழில் "வடகறி" படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடிய சன்னி லியோன், "ஓ மை கோஸ்ட்" என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் நடித்து வந்த "வீரமாதேவி" என்ற திரைப்படம் கைவிடப்பட்டது. கடைசியாக "தீ இவன்" என்ற படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார்.
இதையடுத்து மலையாளத்தில் "மதுரராஜா" என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியதின் மூலம் அங்கு அறிமுகமானார். தற்போது "ரங்கீலா" என்ற படத்தில் நடித்து வரும் சன்னி லியோன் மலையாளத்தில் ஒரு வெப் சீரியஸில் நடித்திருப்பது தெரிய வந்துள்ளது.
"பான் இந்தியன் சுந்தரி" என்ற அந்த வெப் சீரிஸில் மாளவிகா ஸ்ரீகாந்த் நாயகியாக நடிக்கிறார். மேலும் சதீஷ் குமார் என்பவர் இத்தொடரை இயக்குகிறார். இதில் சன்னி லியோன் ஒரு நடிகையாகவே நடிக்கிறார். மேலும் பான் இந்தியா தொடராக உருவாகும் இது ஒரு அடல்ட் காமெடி தொடர் என்று கூறப்படுகிறது.