மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொல மாஸ்... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைய இருக்கும் தென்னிந்திய சூப்பர் ஸ்டார்கள்.! புதிய அப்டேட்.!
தென்னிந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டாராக விளங்கி வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் தற்போது ஜெயிலர் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தினை தொடர்ந்து தற்போது லால் சலாம் திரைப்படத்திற்கான படப்பிடிப்பில் இருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். லால் சலாம் திரைப்படத்திற்கு பிறகு ஜெய் பீம் திரைப்படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்நிலையில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார்கள் ஆன பாலகிருஷ்ணா சிவராஜ்குமார் ஆகியோர் இணைந்து ஒரு திரைப்படத்தில் பணியாற்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
பிரபல கன்னட இயக்குனர் இயக்க இருக்கும் இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாக இருக்கிறது. இதன் முதல் பாகத்தில் சிவராஜ்குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். பாலகிருஷ்ணா சிறிய வேடத்தில் தோன்றுகிறார். இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் ரஜினிகாந்த் மற்றும் பாலகிருஷ்ணா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாகவும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன. இதனைப் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.