மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
AR முருகதாஸ் கதையை ரிஜெக்ட் செய்தாரா சூப்பர் ஸ்டார்? வெளியான பரபரப்பு செய்தி!
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் AR முருகதாஸ். இவர் இயக்கத்தில் வெளியான சர்க்கார் திரைப்படம் பல்வேறு எதிர்ப்புகள், சர்ச்சைகளுக்கு பிறகு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்குகிறார் AR முருகதாஸ்.
இந்நிலையில் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் கூறிய கதைகள் ரஜினிக்கு பிடிக்கவில்லை என செய்திகள் கசிந்துள்ளது. கபாலி, காலா என ரஜினியின் சீரியஸ் படங்கள் அவரின் ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை.
பல வருடம் கிடப்பில் இருந்த 2.0 வெளியாகி சற்று ஆறுதலை அளித்துள்ளது. அதேபோல், கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் உருவாகியுள்ள பேட்ட படத்தில் பழைய ரஜினியை அவர்கள் ரசிகர்கள் பார்த்து ரசிப்பார்கள் எனத் தெரிகிறது. பேட்ட படத்தின் பாடல்களும், டீசர் வீடியோவும் அதை உறுதி செய்கிறது.
அதேபோல் அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு ‘நாற்காலி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் செய்தி வெளியானது. ரஜினி தீவிர அரசியல் ஈடுபடவேண்டும் என அவரின் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், படத்தின் தலைப்பே ‘நாற்காலி’ என இருந்தால் படம் எப்படி இருக்கும் என சொல்லத் தேவையில்லை.
ஆனால், முருகதாஸ் கூறிய 2 கதைகளும் ரஜினிக்கு பிடிக்கவில்லையாம். தற்போது 3வது கதையை அவர் உருவாக்கி வருவதாக தெரிகிறது. இனிமேல் மசாலா, கமர்ஷியல் படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என ரஜினி முடிவெடுத்துள்ளார் என்பது கூடுதல் செய்தி.