மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஜுலியை போல மாறிய பிக்பாஸ் சுரேஷ்! என்னம்மா நடிக்குறாரு! இணையத்தை கலக்கும் டப்ஸ்மாஷ் வீடியோ!
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் 4வது சீசனில் 16 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்து கொண்டவர் சுரேஷ் சக்ரவர்த்தி. இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த சில நாட்களிலேயே ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார்.
பிக்பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் சக போட்டியாளரான அனிதா சம்பத்துடன் தகராறு, ரியோவுடன் வாக்குவாதம், சனம் ஷெட்டியுடன் மோதல் என பல சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறார். மேலும் இவரால்தான் சண்டையே வருகிறது என்பது போலவும் கருத்துகள் பரவி வந்தது. அனைத்து டாஸ்க்கையும் சிறப்பாக செய்து வந்த சுரேஷ் சக்ரவர்த்தியை ஹவுட்ஸ்மேட்ஸ்கள் அனைவரும் செல்லமாக தாத்தா என அழைத்து வருகின்றனர்.
Motta Thatha #SureshChakravarthi Dubsmash #Julie #Oviya #BiggBossTamil4 pic.twitter.com/1sOTSorvYo
— BiggBoss 4 (@ItzMeBiggBoss) October 23, 2020
இந்த நிலையில் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமடைந்த சுரேஷ் சக்கரவர்த்தியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நெட்டிசன்கள் கண்டறிந்து வைரலாகி வருகின்றனர். அதனைத் தொடர்ந்து அவர் செய்த டப்ஸ்மாஷ் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில், பிக்பாஸ் சீசன் 1ல் கலந்துகொண்டு பெரும் சர்ச்சைகளைக் கிளப்பிய ஜூலியின் டயலாக்கை பேசி சுரேஷ் நடித்துள்ளார்.