மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கடந்த வாரம் சுஷாந்தின் பெண் மேனேஜர் தற்கொலை..! நேற்று சுஷாந்த் சிங் தற்கொலை..! நீடிக்கும் மர்மம்..! நடந்தது என்ன..?
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தனது 34 வது வயதில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு வெளியான Kai Po Che படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான இவர் தோனியின் வாழ்க்கை வரலாறை மையமாக கொண்டு உருவான ms dhoni untold story திரைப்படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார். ரசிகர்கள் இவரை மற்றொரு தோனியாகவே பார்க்க ஆரம்பித்தனர்.
இந்நிலையில் மும்பையில் உள்ள அவரது வீட்டில் சுஷாந்த் சிங் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்டார். சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்ட தருணத்தில் அவரது நண்பர்கள் சிலரும் அவரது வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது.
அதேநேரம், சுஷாந்த் சிங்கிடம் மேலாளராக பணியாற்றி வந்த திஷா சலியான் என்ற 27 வயது இளம் பெண் கடந்த ஜூன் 8 ஆம் தேதி தனது குடியிருப்பின் 14 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். திஷா சலியான் தற்கொலை குறித்து போலீசார் விசாரித்துவந்த நிலையில் தற்போது சுஷாந்த் தற்கொலை செய்திதிருப்பது சந்தேகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.