மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
Sushant Singh Rajput: மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் நாய் மரணம்.. கண்ணீரில் ரசிகர்கள்..!
ஹிந்தியில் பத்ரா, சிச்க்கோர், எம்.எஸ் தோனி, தில் பசேரா ஆகிய படங்களில் நடித்து இந்திய அளவில் பிரபலமான நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். இவர் கடந்த 2020 ஜூன் மாதம் மும்பையில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டவாறு சடலமாக மீட்கப்பட்டார்.
பாலிவுட் மாபியா அவரை கொன்றுவிட்டது என சுஷாந்தின் ரசிகர்கள் போர்க்கொடி தூக்க, சமீபத்தில் அவரின் மரணத்தில் தற்கொலை என்பது பொய் என்று மருத்துவர் பகீர் தகவலை தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், நடிகர் சுஷாந்தின் வளர்ப்பு நாய் உயிரிழந்துள்ளது.
So long Fudge! You joined your friend’s Heavenly territory… will follow soon! Till then… so heart broken 💔 pic.twitter.com/gtwqLoELYV
— Priyanka Singh (@withoutthemind) January 16, 2023
வரும் ஜனவரி 21ம் தேதி சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் பிறந்தநாள் வரவுள்ள நிலையில், அவரின் வளர்ப்பு நாய் இயற்கை எய்தியுள்ளது என சுஷாந்தின் சகோதரி பிரியங்கா சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இது சுஷாந்த் சிங் ராஜ்புத் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.