மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"பெண் பத்திரிகையாளரை தரக்குறைவாக பேசியதற்கு மன்னிப்பு கேட்ட எஸ். வி. சேகர்!"
1974ம் ஆண்டு தன் கலைப்பயணத்தை தொடங்கியவர் எஸ். வி. சேகர். இவர் மேடை மற்றும் திரைப்பட நடிகராகவும், இயக்குனராகவும், நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் பணியாற்றியவர். மேலும் "நாரதர்" தமிழ் பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்துள்ளார்.
மேலும் 15 ஆண்டுகளாக சின்னத்திரை நடிகர் சங்கத்தலைவராக இருந்துள்ள எஸ். வி. சேகர் பல நாடகங்களையும், திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். இந்நிலையில் பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து அவதூறாக பேசியதற்காக மத்திய குற்றப்பிரிவு போலீசார் இவர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கையும், நெல்லையில் எஸ். வி. சேகர் மீது நிலுவையில் உள்ள வழக்குகளையும் 6 மாதத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் விசாரணைக்கு வந்த எஸ். வி. சேகர் தன் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்தார்.
இதையடுத்து எஸ்.வி. சேகர் தனது பதிவை நீக்கி விட்டதாகவும், மேலும் மன்னிப்பு கோரி பிரமாண வாக்குமூலமும் தாக்கல் செய்தார். இதையடுத்து வழக்கு தொடர்ந்த மனுதாரர் எஸ். வி. சேகர் மன்னிப்பு கூறியதை ஏற்றுக்கொள்வதாக கூறியதால் நீதிபதி வழக்கை முடிக்க உத்தரவிட்டார்.