மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பச்சை நிறமே... பச்சை நிறமே... இன்ஸ்டாவில் வைரலான தமன்னாவின் குளுகுளு போட்டோ சூட்.!
இந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வந்தவர் தமன்னா பாட்டியா. இவர் தமிழில் கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் நடித்த அயன், படிக்காதவன், பாகுபலி , பையா ஆகிய திரைப்படங்களின் வெற்றிகள் இவரை முன்னணி கதாநாயகியாக நிலை நிறுத்தியது.
சிறிது காலம் சினிமாக்களில் இருந்து விலகி மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்த தமன்னா தற்போது சூப்பர் ஸ்டார் நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார். ஒன் இந்தியா திரைப்படமாக உருவாகும் இந்த திரைப்படத்தில் தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
சமீபத்தில் தமன்னா தனது காதல் வாழ்க்கை பற்றி மனம் திறந்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பாலிவுட் நடிகரான விஜய் வர்மாவை காதலிப்பதாகவும் விரைவிலேயே திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் விஜய் மற்றும் தமன்னா இருவருமே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.
சமூக ஊடகங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் தமன்னா தனது போட்டோ சூட் மற்றும் சூட்டிங் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவேற்றி வருவார். இதேபோன்று தற்போது இன்ஸ்டாகிராமில் தனது புதிய போட்டோ சூட் ஒன்றை பகிர்ந்து இருக்கிறார் . பச்சை உடையில் பச்சை பசேல் என்று இருக்கும் தமன்னாவை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.