மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பார்ரா.. விஜய்சேதுபதியை தொடர்ந்து தொகுப்பாளினியாக களமிறங்கும் பிரபல இளம்நடிகை! அதுவும் யார்னு பார்த்தீங்களா!!
முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் பிரபலங்களாக இருந்த பலரும் பட வாய்ப்புகள் பெருமளவில் வராமல், தங்களது மார்க்கெட் குறைந்த பிறகுதான் சின்னத்திரை தொடர்களில் நடிப்பது, தொகுப்பாளர்களாக களமிறங்குவது என தங்களை பிசியாக்கி கொள்வர். ஆனால் தற்போது அந்த நிலை முற்றிலும் மாறிவிட்டது.
தற்போதெல்லாம் சினிமா துறையில் மெகா ஸ்டார்களாக, முன்னணி பிரபலங்களாக இருக்கும் பலரும் தொகுப்பாளர்களாக களமிறங்கி பட்டையை கிளப்புகின்றனர். அதாவது சரத்குமார், சூர்யா, ஆர்யா, அரவிந்த்சாமி, பிரகாஷ் ராஜ், விஷால், கமல்ஹாசன், ராதிகா, ஸ்ருதிஹாசன் என பலரும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளனர்.
இந்த நிலையில் சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாகவிருக்கும் 'மாஸ்டர் செப்' என்ற நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ளார். மேலும் இந்நிகழ்ச்சியை கன்னடத்தில் நான் ஈ பட நடிகர் சுதீப் மற்றும் தெலுங்கில் நடிகை தமன்னா தொகுத்து வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகை தமன்னா இதற்கு முன்பு இந்த நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கியதில்லை. ஆனால் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.