மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காசியில் சாமியாராக மாறிய தமன்னா.! வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி.!?
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் தமன்னா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பல மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தனது நடிப்பு திறமையின் மூலம் தனக்கென தனி இடத்தை திரைத்துறையில் நிலைநாட்டியவர். தமிழில் முதன் முதலில் கேடி திரைப்படத்தின் மூலம் வில்லி கதாபாத்திரத்தில் அறிமுகமானார்.
இப்படத்திற்கு பின்பு விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து பல வெற்றி திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு அளித்துள்ளார். இவ்வாறு தமிழில் பிசியான நடிகையாக இருந்து வந்த தமன்னா, இறுதியாக 'ஜெயிலர்' திரைப்படத்தில் 'காவலா' என்ற பாடலின் மூலம் மீண்டும் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தார்.
ரஜினி காந்த நடிப்பில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படத்தின் வெற்றிக்கு தமன்னாவின் காவலா பாடல் முக்கிய காரணம் என்று கூறப்பட்டு வருகிறது. இவ்வாறு சினிமாவில் பிஸியாக இருந்து வரும் நடிகர் தமன்னா, விஜய் வர்மாவை காதலிப்பதாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெளிப்படையாக கூறியிருந்தார். விரைவில் இவர்களுக்கு திருமணம் நடைபெற போவதாகவும் இணையத்தில் செய்திகள் வெளியாகின.
இவ்வாறு காதலிலும், சினிமாவிலும் பிஸியாக இருந்து வரும் சமந்தா தற்போது ஆன்மீக பயணத்திலும் பிசியாக இருந்து வருகிறார். காசிக்கு சென்று கழுத்தில் மாலையுடன் நெற்றியில் திருநீறு, ருத்ராட்ச கோட்டை என சாமியாராகவே மாறிய புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார். இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் பலவிதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.