மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதலருக்கு முத்தம் கொடுத்து புத்தாண்டை கொண்டாடிய தமன்னா..!
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நாயகியாக நடித்து வருகிறார் தமன்னா. 30 வயதைக் கடந்த தமன்னாவைப் பற்றி அடிக்கடி காதல் மற்றும் திருமணம் பற்றிய வதந்திகள் வருகின்றன.
அவர் வழக்கமாக அதை மறுப்பார். ஆனால் இந்த முறை எந்த ஆட்சேபனையும் இருக்க முடியாது. இவர் தனது காதலருக்கு முத்தம் கொடுத்து புத்தாண்டு தினத்தை கொண்டாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பல ஹிந்தி படங்களில் நடித்துள்ள விஜய் வர்மா தான் தமன்னாவின் காதலன் என்று கூறப்படுகிறது. தமன்னா அவருடன் கோவாவில் பல பகுதிகளில் இருவரும் சுற்றி, தனது புத்தாண்டைக் கொண்டாடியுள்ளனர்.
பாகி 3, பின்க், டார்லிங்ஸ்' உள்ளிட்ட ஹிந்திப் படங்களில் விஜய் வர்மா நடித்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் இதற்கு முன்பும் அடிக்கடி ஒன்றாக சுற்றியவர்கள்தான் என்கிறது பாலிவுட் வட்டாரம்.
ஒரு பார்ட்டியில் இருவரும் கட்டிப்பிடித்து முத்தமிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. விரைவில் தமன்னாவும் தனது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிடலாம் என்றும் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.