அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
விஜய் சேதுபதி: யாரையும் பிடிக்கலேனா கூட வெளிப்படுத்த தேர்தல் இருக்கு; ரசிகர்களுக்கு அன்பு கட்டளை.!
ஒரு துணை நடிகராக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் வெளியாகும் பெரும்பாலான படங்கள் மாபெரும் வெற்றிபெறுகிறது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 96 திரைப்படம் ஒரு காதல் காவியமாக அனைவராலும் கொண்டாடப்பட்டது.
தற்போது மாமனிதன், சூப்பர் டீலக்ஸ் போன்ற அப்படங்களில் நடித்துவருகிறார் விஜய் சேதுபதி. சூப்பர் டீலக்ஸ் படத்தின் ட்ரைலர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி வைரலானது. தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வரும் 29ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பகத் பாசில் ஆகியோர் உள்பட பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த விஜய் சேதுபதி இப்படத்தில் நடித்த அனுபவத்தைப் பற்றி பேசினார். மேலும் வரும் மக்களவை தேர்தலில் யாரும் ரசிகர்களும், பொதுமக்களும் அரசியலை விட்டு விலகக் கூடாது. அரசியல் சாக்கடை என்று சொல்லிவிட்டார்கள். அவ்வப்போது, சமூக வலைதளங்களில் கருத்து சொல்வதோடு நின்றுவிடக்கூடாது. நமக்கு யாரையும் பிடிக்கவில்லை என்றாலும் கூட அதனை வெளிப்படுத்த இந்த தேர்தல் இருக்கு. நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க அனைவரும் ஓட்டு போட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.