மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பேட்மிண்டன் வீரருடன் 9 வருஷ லவ்.! திருமணம் எப்போ?? மனம் திறந்து பதிலளித்த நடிகை டாப்ஸி!!
தமிழ் சினிமாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த ஆடுகளம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் டாப்ஸி. தொடர்ந்து அவர் வந்தான் வென்றான், ஆரம்பம், வலை, காஞ்சனா 2, வை ராஜா வை, கேம் ஓவர் போன்ற படங்களில் நடித்திருந்தார். மேலும் அவர் தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது டாப்ஸி தமிழில் ஜன கன மன படத்தில் நடித்து வருகிறார் மேலும் ஹிந்தியில் டுங்கி என்ற படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். நடிகை டாப்ஸி டென்மார்க் நாட்டை சேர்ந்த பேட்மிண்டன் வீரர் மத்தியாஸ் போயை காதலித்து வருவதாக ஏற்கனவே கூறியிருந்தார். இந்த நிலையில் அண்மையில் பேட்டி ஒன்றில் அவர்களது திருமணம் குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு டாப்ஸி, எனது சம காலத்து நடிகைகள் பலருக்கும் திருமணமாகி குழந்தை பெற்று கொண்டுள்ளனர். நானும், மத்தியாஸ் போயும் 9 ஆண்டுகளாக காதலித்து வருகிறோம். இன்னும் அவருடன் டேட்டிங் செய்ய விரும்புகிறேன். நான் திருமணத்துக்கு அவசரப்படவில்லை. சினிமாவில் எனக்கென்று எந்த போட்டியும் கிடையாது. நான் தற்போது நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறேன் எனக் கூறியுள்ளார்.