மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தனது போட்டோவை பார்த்து கலாயத்த ரசிகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த டாப்சி
தமிழில் ஆடுகளம், வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா-2 உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்த நடிகை டாப்சி இப்போது இந்தியில் அதிகமான படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது தட்கா, கேம் ஓவர் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து மிஷன் மங்கள், ஷாந்த் கீ ஆங்க் ஆகிய ஹிந்தி படங்களிலும் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார் டாப்சி.
இதில் ஷாந்த் கீ ஆங்க் என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதில் டாப்சி மற்றும் சக நடிகையான பூமி இருவரும் மிகவும் வயதான பாட்டி வேடத்தில் நடிக்கின்றனர். இந்த கதை உலகில் வயதான துப்பாகிசுடும் பெண்களை பற்றியதாகும். எனவே தான் டாப்சி இந்த கதையில் விரும்பி நடிக்கிறாராம்.
இதனைத் தொடர்ந்து டாப்சி ஏன் இதைப்போன்ற வயதான கேரக்டரில் நடிக்கிறார், பல சீனியர் நடிகைகளே இதில் நடிக்க மறுத்தபோது டாப்சி ஏன் நடிக்க வேண்டும் என பல ரசிகர்கள் கமெண்ட் செய்தனர். வயதான நடிகைககளே இளமையான கேரக்டரில் நடிக்க விரும்பும் போது டாப்சிக்கு எதற்கு இந்த வேலை என்றும் கிண்டல் செய்தனர்.
இதற்கு தற்போது பதிலளித்துள்ள டாப்சி, அந்த கதை தனக்கு மிகவும் பிடித்துபோனதால் தான் இதில் நடிக்க ஒத்துக்கொண்டேன். இதுக்குறித்து ஏன் அனைவரும் கிண்டல் செய்கிறார்கள். 30 வயதான எனக்கும் கல்லூரிக்கும் ரொம்ப தூரம். ஆனால் நான் கல்லூரி மாணவியாக நடிக்கும் போது மட்டும் ஏற்றறுக்கொள்ளும் அவர்களால் ஏன் இந்த வயதான கதாப்பாத்திரத்தை மட்டும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என கூறியுள்ளார்.