மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடக்கொடுமையே! சினிமாவுக்கு வந்த புதுசுல ஆடுகளம் நாயகி இவ்வளவு மோசமாக நடத்தப்பட்டாரா? அவரே கூறியதை கேட்டு செம ஷாக்கான ரசிகர்கள்!
தமிழில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ஆடுகளம் படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. அதனை தொடர்ந்து அவர் ஆரம்பம், காஞ்சனா 2 உள்ளிட்ட பல ஹிட் படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து அசத்தலாக நடித்துள்ளார்.
நடிகை டாப்சி தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்து தனக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகை டாப்ஸி, தான் சினிமாவில் அடியெடுத்து வைத்த ஆரம்ப காலத்தில் சந்தித்த மோசமான அனுபவங்கள் குறித்து
தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, ஆரம்பத்தில் ஹீரோயின் மனைவிக்கு என்னை பிடிக்கவில்லை என ஒரு படத்தில் இருந்து நீக்கப்பட்டேன். ஒரு ஹீரோவுக்கு நான் பேசிய வசனம் பிடிக்கவில்லை என்பதால் எனக்கு தெரியாமல் வேறு டப்பிங் கலைஞரை வைத்து பேச வைத்தார்கள். அதுமட்டுமின்றி ஒரு படத்தில் ஹீரோவின் அறிமுகக் காட்சியை விட எனது காட்சி சிறப்பாக இருந்ததால் சீனையே மாற்ற வைத்தார்கள். மேலும் ஒரு நடிகரின் முந்தைய படம் சரியாக ஓடவில்லை என்பதற்காக எனது சம்பளத்தை குறைக்க சொன்னார்கள். இவ்வாறு திரைத்துறையில் ஆரம்ப கட்டத்தில் நான் பலவிதமான மோசமான அனுபவங்களை சந்தித்துள்ளேன்.
அதனால் தற்போது எந்த படத்தில் பணியாற்றினால் எனக்கு மகிழ்ச்சி கிடைக்குமோ அந்த படத்திலேயே நடிக்க வேண்டும் என முடிவெடுத்துள்ளேன். மேலும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களில் நடித்த பின்பு அந்த நடிகையை தங்களுக்கு ஜோடியாக நடிக்க வைக்க சில ஹீரோக்கள் தயங்குகிறார்கள் என தெரிவித்துள்ளார்.