மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆடுகளம் படநடிகை டாப்ஸிக்கு விரைவில் கல்யாணமாம்.! மாப்பிள்ளை எந்த பிரபலம் தெரியுமா.?
தமிழ் சினிமாவில் அறியப்படும் நடிகையாக வலம் வருபவர் டாப்ஸி பண்ணு இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்துள்ளார். தெலுங்கு மொழியில் அறிமுகமான டாப்ஸி தமிழில் 'ஆடுகளம்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக காலடியெடுத்து வைத்தார்.
முதல் படத்திலேயே தனது நடிப்பு திறமையாலும், அழகினாலும் ரசிகர்களின் மனதை கவர்ந்து தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். ஆனால் இப்படத்திற்கு பின் இவர் நடித்த திரைப்படங்கள் பெரிதளவில் வெற்றி பெறவில்லை.
இதனால் இவருக்கு படவாய்ப்புகள் எதுவும் தமிழில் அமையவில்லை. இதனால் தமிழில் இருந்து தற்போது பிற மொழி திரைப்படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார். இதுபோன்ற நிலையில் டாப்ஸி அவரது காதல் உறவை பற்றி பேட்டியில் பேசியிருக்கிறார்.
அவர் கூறியதாவது, நான் 9வருடங்களாக டென்மார்க்கை சார்ந்த பேட்மிட்டன் வீரர் ஒருவரை காதலித்து வருகிறேன். இருவருமே அவரது வேளைகளில் பிஸியாக இருந்து வருகிறோம். விரைவில் திருமணம் செய்துகொள்ள தயாராகி கொண்டிருக்கிறோம் என்று கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.