மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சமையலுக்கு வந்த பெண்ணை மனைவியாக்கிய நடன இயக்குனர்; யூடியூப் சேனலுக்கு நடுரோட்டில் கட்டிபிரண்டு சண்டை..!
தெலுங்கு திரையுலகில் நடன இயக்குனராக இருந்த வந்தவர் ராகேஷ் மாஸ்டர் (வயது 53). இவர் சமீபத்தில் மரமடைந்த நிலையில், இவரின் மூன்றாவது மனைவி லட்சுமி, ஐதராபாத்தில் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்தார்.
அப்போது, லல்லி என்ற யூடியூபர் 4 பெண்களுடன் லட்சுமியை இடைமறித்து தாக்கி இருக்கிறார். சாலையில் கண்மூடித்தனமாக தாக்குதல் நடந்துள்ளது.
இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு உள்ளூர் மக்கள் தகவல் தெரியவரவே, விரைந்து வந்த அதிகாரிகள் லட்சுமியை மீட்டனர். அவர் அளித்த புகாரின் பேரில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். இருதரப்பும் புகார் அளித்ததால் விசாரணை நடந்தது.
விசாரணையில், லட்சுமியுடன் சேர்ந்து அவரை தாக்கிய கும்பலும் யூடியூப் சேனலை நடத்தி வந்துள்ளது. அதனை நிர்வகிப்பதில் ஏற்பட்ட தகராறு தெருவில் நடந்துள்ளது. ராகேஷ் மாஸ்டரின் வீட்டிற்கு சமையல் செய்ய வந்த பெண்மணி மனைவியான நிலையில், இருவரும் யூடியூப் சேனலை ஒன்றாக கவனித்து வந்துள்ளனர்.
பின்னர், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தபோது, யூடியூப் சேனலை ராகேஷிடம் இருந்து லட்சுமி பறித்து சென்றுள்ளார். இதனால் ராகேஷின் குடும்பத்தினர் லட்சுமியின் மீது தாக்குதல் நடத்தி இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.